• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி உள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

July 2, 2019

கிரண்பேடிக்கு விளம்பர வியாதி உள்ளது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ,

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்போடி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் குறித்து அவதூறாக வாட்ஸ்அப்பில் கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் ஊழல் வாதிகள் என்றும் பொதுமக்களுக்கும் அந்த ஊழலில் சம்பந்தம் உள்ளது என்று கூறுவது கண்டனத்துக்குரியது.

தண்ணீர் பஞ்சம் தமிழ்நாடு மற்றும் புதுவையில் மட்டுமல்ல. மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கான, உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளது. பருவ மழை பொய்த்ததால் இந்த நிலை. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். கிரண்பேடி 2 ஏரி 1 வாய்க்கலை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கு நாங்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தோம். நீர் நிலைகளை புதுபித்து 8 ஏரி 45 குளம் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட காரணம் பருவ மழை பொய்த்ததாலும் கிருஷ்ணா நீர் கிடைக்காததும் தான். தமிழகதிற்கு சம்பந்தமே இல்லாத கிரண்பேடி தமிழக அரசியல் தலைவர்களை உழல்வாதி என்கிறார். அதை கூற அவருக்கு அருகதை இல்லை. அவரே அவருக்கு கெட்டை பெயர் ஏற்படுத்திக்கொள்கிறார். தமிழக தலைவர்கள் குறித்து கிரண்பேடி பேசியது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். ஆனால் அவரது பேச்சு அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கியுள்ளார். கிரண்பேடியின் நடவடிக்கையால் மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.ஆதாரம் இல்லாமல் மக்கள் மற்றும் தலைவர்களை ஊழல் வாதி என்கிறார். உண்மையில் அவருக்கு தான் ஒரு வியாதி உள்ளது. அது விளம்பரம் வியாதி. எதை பற்றியும் அவருக்கு கவலை இல்லை. ஹெல்மெட் அணியாத பெண்ணை கையை பிடித்து இழத்து கேவலமாக நடந்து கொண்டார். ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கோப்புகள் நிலுவையில் உள்ளது. அதனால் உயர்நீதிமன்றம் சென்றோம். நியாயமான தீர்ப்பு கிடைத்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு தொல்லை கொடுக்கவே மத்திய அரசு இது போன்றவர்களை நியமிக்கிறது.2 வருடம் கழித்து புதுச்சேரியை விட்டு சென்றுவிடுவேன் என்றவர் இன்னும் செல்லவில்லை. ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசினார். பாராளுமன்றத்தில் இந்த பிரச்சனை குறித்து உறுதியாக கேள்வி எழுப்புவார்கள். எதிர்கட்சிகள் தங்கள் வேலையை செய்து வருகிறார்கள். மக்கள் தேவைபடும் போது பொங்கி எழுவார்கள் என்றார்.

மேலும் படிக்க