• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகை காலமானார்

June 27, 2019

பழம்பெரும் தெலுங்கு திரையுலக பெண் இயக்குநரும், நடிகையுமான விஜயநிர்மலா(வயது 73) உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்.

பழம்பெரும் நடிகையும் இயக்கநருமான விஜய நிர்மலா, இன்று காலை ஐதராபாத்தில் இருக்கும் ஓர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவருக்கு 75 வயது. அவரின் மகன், நடிகர் நரேஷ், இது குறித்த தகவலை ட்விட்டர் மூலம் தெரிவித்தார். மேலும் அவர், தனது தாயாரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று கூறியுள்ளார்.

1950ல் மச்சரேகை என்ற தமிழ்ப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜயநிர்மலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தெலுங்கில் 44 திரைப்படங்களை இயக்கி, அதிக படங்களைஇயக்கிய பெண் இயக்குநர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து இவர் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் நாளை இந்த இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. விஜய நிர்மலா மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க