• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

August 5, 2019 தண்டோரா குழு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35A-வை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

காஷ்மீரில் பெண்களுக்கு இதுநாள் வரை அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. பிற மாநில இளைஞர்களை திருமணம் செய்த காஷ்மீர் இளம்பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் நடவடிக்கை மூலம் தற்போது காஷ்மீர் பெண்கள் சம உரிமை பெற்றுள்ளனர்.சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் சலுகைகளை பெறமுடியும். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட,பழங்குடியின மக்கள் பெறும் சலுகைகள் காஷ்மீரில் பெற முடியாத சூழல் நிலவியது. காஷ்மீரின் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தற்போது அனைத்து சலுகைகளையும் பெற முடியும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை.தொப்பியில் இருந்தும் முயலை எடுப்பது போல் திடீரென சட்டப்பிரிவு 370ஐ நீக்கவில்லை. உரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்கு பிறகே சட்டப்பிரிவு 370ஐ நீக்கியுள்ளோம் என விளக்கமளித்தார்.

மேலும் படிக்க