• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்

June 1, 2021 தண்டோரா குழு

காவேரி குரூப் ஆப் கம்பெனி, ஹோம் பார்க் நிறுவனம் மற்றும் லயன்ஸ் கிளப் ஜூபிடர் இணைந்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையரிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பணிகளை காவிரி குரூப் ஆப் கம்பெனி மற்றும் லயன்ஸ் கிளப் ஜூபிடர் இணைந்து இதுவரை ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில்பல்வேறு நிவாரண பணிகளை செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சி மீட்டர், முக கவசம் மற்றும் ஹேண்ட் ப்ரீ சானிடைசர் (Hands free sanitizer) உள்ளிட்டவை காவேரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் மற்றும் ஹோம் பார்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியனிடம் வழங்கினர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில்,

கொரோனா காலகட்டத்தில் கட்டுமானம் சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு பல்வேறு உதவி புரிந்தும், ஒரு மாத காலமாக தினமும் 100 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டும், எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் செய்தும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதலமைச்சர் நிதிக்கு ரூபாய் 1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று 150 ஆக்சி மீட்டர், 5 ஆயிரம் முகக் கவசங்கள், ஹேண்ட் பிரீ சானிடைசர் (Hands free sanitizer) உள்ளிட்டவை ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சிக்கு மாநகராட்சி ஆணையர் ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க