March 17, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 25-ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை அமைக்கவேண்டும் என்று சட்டபேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றபட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 25-ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் மேலாண் வாரியத்தை அமைக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய பின் தினகரன் அறிவித்துள்ள முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது