April 9, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதா மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோவை உக்கடம் பகுதி மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு நாள் கடையடைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று மீன் மார்கெட்டில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன, இதனால் இன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்கு வந்த மீன் வீணாது. மேலும், போராட்டத்தால் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.