March 29, 2018
தண்டோரா குழு
காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவது ஓட்டு வேட்டைக்கான விளையாட்டு.மத்திய அரசுக்கு வலுவான எண்ணம் இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம். இரண்டு மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை, அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.மேலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களோடு இணைந்து ஏப்.,1ம் தேதி போராட உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.