February 19, 2018
தண்டோரா குழு
காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது தொடர்பாக குறை கூற விரும்பவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்படுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.எனவே இது வெறும் கருத்துரையா அல்லது தீர்ப்பா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,கணினி மயமாக நதிநீர் பங்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி உத்தரவை மத்திய அரசு மதிக்க தவறினால் பிரதமர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு போட வேண்டும்.காவிரி தண்ணீர் தரவில்லை என்றால் அரசியல் போராட்டத்தில் இறங்கும் நிலை ஏற்படும் என்று கூறினார்.