April 9, 2018
தண்டோரா குழு
காவிரி தொடர்பான செயல்திட்ட வரைவை மே 3ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்பிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி வழக்கில் தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மத்திய அரசின் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.காவிரி தொடர்பாக இறுதி நேரத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது கண்டனத்துக்குரியது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், காவிரி தொடர்பான திட்டத்தை செயல்படுத்த மே 12 வரை மத்திய அரசு கால அவகாசம் கோரிய நிலையில்
மே 3-க்குள் திட்டத்தை வகுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. செயல்திட்டத்தை உருவாக்குவதில் இருந்து மத்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. இரு மாநிலங்களும் அமைதி காக்க வேண்டும்; வன்முறை சம்பவங்களில் ஈடுபட கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை மே 3-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.