March 27, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக தேர்தல் தடையாக இருக்காது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டபேரவைக்கு மே12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நன்னடத்தை விதிகள் அமலாகும் பட்சத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது மாற்று அமைப்பு உருவாவதில் சிக்கல்? உருவாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராம் பிரகாஷ் ராவத், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை; நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றலாம் என கூறியுள்ளார்.