March 19, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று மக்களவை துணை சபா நாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் 11வது நாளாக அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போராடி வருகிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக மத்திய அரசு உறுதி அளித்தால் மட்டுமே அவையை நடத்த விடுவோம் என்று கூறியுள்ளார்.