April 7, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபயணத்தை தொடங்குகிறார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,
திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தொடங்கவுள்ள காவிரி மீட்பு நடை பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்கவுள்ளார். காவிரி உரிமை மீட்புப் பயணம் முக்கொம்பில் இருந்து முதல் குழுவும், 9-ம் தேதி அரியலூரில் இருந்து 2-வது குழுவும் பயணம் தொடங்கவுள்ளது.
மேலும்,காவிரி உரிமை மீட்புப் பயணத்தில்,வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று,குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம்.காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இறுதியில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.காவிரிக்காக நடைபெறும் இந்த மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார்.