• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தக சங்கங்கள்

April 3, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வர்த்தக சங்கங்கள் நடத்தி வரும்  போராட்டம் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் பல நூறு கோடி ரூபாய்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நடைபெற்று வரும் இப்போராட்டங்களின் ஒரு பகுதியாக தமிழக வியாபாரிகள் சங்கத்தின் பேரமைப்பு சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் துவங்கியுள்ளது.

இந்த போராட்டத்தின் காரணமாக கோவை ஆர்.ஜி.வீதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை வியாபார கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.இதே போல் மருந்து கடைகள்,பேக்கரிகள், உணவகங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் இருதயராஜா,

இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இதனால் மத்திய அரசுக்கு வரியாக செல்லும் சுமார் 100 கோடி ரூபாய் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மத்திய அரசு கர்நாடக மாநில தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தை மாற்றாந்தாய் மனபான்மையுடன் நடத்துவதால் கட்சி சார்பின்றி அனைத்து தரப்பினரும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களிடம் இந்த போராட்டத்திற்கு பெரும் ஆதரவு இருப்பதாக கூறிய அவர் மத்திய அரசு இதற்கும் செவிசாய்க்காவிட்டால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,இந்த போராட்டத்தில் கோவை மாநகரில் சுமார் 1500 மருந்து கடைகளும், மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் மருந்து கடைகளும் கலந்து கொண்டு பூட்டப்பட்டுள்ளன.அதே போல் கோவை மாநகரில் மட்டும் சுமார் 150 உணவகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக இன்று ஒரே நாளில் சுமார் 200 முதல் 300 கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க