March 30, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
“அதிமுகவின் உண்ணாவிரதம் தாமதமானது,காவிரி விவகாரத்தில் உண்ணாவிரதம் எல்லாம் கூடாது.காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும்.காவிரி வாரியத்திற்காக தமிழக எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தியாகம் செய்ய வேண்டும்.திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புண்டு.காவிரிக்காக போராட வேண்டிய நிலை வந்துள்ளது”.இவ்வாறு அவர் பேசினார்.