• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-முதல்வர்

March 26, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-முதல்வர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் சில தினங்கள் இருக்கின்றது எனவும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என எதிர்பார்க்கின்றோம்,அப்படி அமைக்கவில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூரில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 86 எழை ஜோடிகளுக்கு திருமணம் ,உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே 215.51 கோடி மதிப்பில் 1.94 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலத்திற்கு அடிகல் நாட்டுதல், தொண்டாமுத்தூர் பவானி கூட்டு குடி நீர் திட்டத்தினை மக்களுக்கு அர்பணித்தல் ஆகியவை சேர்த்து முப்பெரும் விழாவாக இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்தார்.

இந்து மதத்தை சேர்ந்த ஜோடிகளுக்கு தமிழ் முறைபடியும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர் மணமக்களுக்கு அவர்கள் முறைப்படியும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி,உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஓராண்டு காலத்தில் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதைவற்றை தமிழக முதல்வர் செய்து இருக்கின்றார்.பேக்கேஜ் மாதிரி தினகரன் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு இருப்பது ஓரே ஆட்கள்தான் என தெரிவித்த வேலுமணி, தினகரன் குடும்ப பின்னணியுடன் அரசியலுக்கு வந்தவர்கள் எனவும், குடும்ப பின்னணி இல்லாமல் மக்களை சந்தித்து வந்தவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும்,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் என தெரிவித்தார். முதல்வரை பார்ப்பதை போல அவர்களை எளிமையாக சந்திக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். சூப்பர் ஸ்டார்கள் என சினிமா திரையில் நடித்து விட்டு சிலர் இப்போது அரசியலுக்கு வருகின்றனர் எனவும் பல திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி அவர் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் அணியாக இருக்கின்றனர் எனவும் அவர்கள் விரைவில் காணாமல் போவார்கள் எனவும் தெரிவித்தார்.ஆனால் இதயக்கனி நம்மிடம் இருக்கின்றது.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் திருமணம் நடத்தி வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.மணமக்கள் ,ஏற்றமும் இறக்கமும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதையும் தோல்வி இல்லாத மனிதன் முழுமையான மனிதன் இல்லை என்று அரிஸ்டாட்டில் என்று கூறியதை மனதில் கொண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தினர்.

இதனை தொடந்து பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  பிறந்த நாள் விழாக்களை மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாட வேண்டும் என ஜெயலலிதா அறிவுறுத்தியபடி திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்து,முஸ்லீம்,கிறிஸ்தவர் என அவர்கள் மத முறைப்படி இந்த 86 திருமணங்கள் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த அரசு மதசார்பற்ற அரசு என்பதற்கு இந்த திருமணமே சான்று என தெரிவித்தார்.இந்த அரசு ஜெயலலிதா , எம்.ஜி.ஆர் வழியில் மதசார்பற்ற அரசாக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாகவும் இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், அவர்கள் கட்சி மாநாட்டில் சொடக்கு போட்டால் இந்த ஆட்சியே இருக்காது என பேசி இருக்கின்றார் எனவும் கடப்பாரை வைத்து நெம்பினாலும் இந்த அட்சியை ஓன்றும் திமுகவால் ஈன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இது வரை இல்லாத அளவு ரகளை செய்த போதே இந்த ஆட்சியை ஓன்றும் செய்ய முடியவில்லை எனவும், இந்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் நிறைவேறாது என தெரிவித்தார்.

அதிமுகவின் ஓன்றரை கோடி சிப்பாய்கள் இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் எனவும் ஆட்சியை கலைப்பை பற்றி கனவில் கூட நினைக்ககூடாது எனவும் அது நடக்காது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

14 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் இடம் பெற்று இருந்த திமுக,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்போதே அமைத்து இருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினைகள் இல்லை எனவும் தெரிவித்தார். அதிகாரம் வேண்டும் என்பதற்காக திமுக, அப்போது நாட்டு மக்களின் நன்மையையை பற்றி சிந்திக்கவில்லை எனவும், காவிரி பிரச்சினைக்காக சட்ட போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நல்ல வாய்ப்பை திமுகவினர் நழுவ விட்டு விட்டனர் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் சில தினங்கள் இருக்கின்றது எனவும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என எதிர்பார்க்கின்றோம் அப்படி அமைக்கவில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கோவை,சேலம், மதுரை ஆகிய இடங்களில் பஸ்போர்ட் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்த முதல்வர் கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்பட இருப்பதால் கோவை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் எனவும்,இதனால் 10 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள் எனவும் திட்டத்தில் சில குளறுபடிகள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதாகவும் இதில் உள்ள குறைகள் சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உகந்தவாறு இந்த திட்டம் மாற்றி அமைக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.இந்த விழாவில் முதல்வர் ,துணைமுதல்வர் ஆகிய இருவருக்கும் வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க