• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவரை நியமிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

December 8, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.இதை ஏற்ற மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

இதன்படி காவிரிமேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்திறகு தற்காலிக தலைவராக மசூத் ஹூசைன் இருக்கிறார்.இவர் மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர, சுதந்திரமான தலைவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது. இதற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க