• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவு!

June 1, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி,மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. எனினும்,மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

அந்த கோரிக்கைகயை நிராகரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை ஏற்றுக்கொண்டது.அதைபோல்,இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும்,பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால்,இன்னும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை.இதையடுத்து,இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடரலாம் கூறப்பட்டது இந்நிலையில்,காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார்.

இதையடுத்து,காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான ஆணையை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க