April 3, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்வு இருந்தால் அனைவரும் ராஜினாமா செய்யுங்கள் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திர்ராஜன்,
காவிரி பிரச்சனையில் பாஜக ஆக்கபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்காக போராடி பாஜக காவிரி நீரை பெற்று தரும், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா கூட ஒழுங்காக செய்யவில்லை,காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்வு இருந்தால் அனைவரும் ராஜினாமா செய்யுங்கள் என தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம், மேகதாது அணை கட்டுவோம் என்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதற்கு திருநாவுக்கரசு, ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அரசியல் கட்சிகளின் போராட்டம் கண்துடைப்பு மட்டுமே,பாஜக சட்ட ரீதியாக தீர்வு காண முயற்சித்து வருகிறது.
காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட கட்சிகளே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுகின்றன காங்கிரஸ், திமுகவால் மறுக்கப்பட்ட காவிரி நீர் பாஜகவினால் வரும்,முதலமைச்சர் உண்ணாவிரதம் தொடர்பான கேள்விக்கு, போராடுவது அவரவர் உரிமை என அவர் பதிலளித்தார்.