January 30, 2018
தண்டோரா குழு
காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில்,
டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்தடப்பட்டது.
முதலமைச்சர் மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள் பெங்களூரு சென்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டதாகவும், இதற்காக நாள் மற்றும் நேரம் ஒதுக்கக் கோரி கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.