February 16, 2018
தண்டோரா குழு
காவிரி நதி நீர் விவகாரத்தில் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி.க்கு பதிலாக 177.25 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்திற்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் தர உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்றும், அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும்.
மேலும்,கலைஞர் தமிழகத்திற்குப் பெற்றுத்தந்த உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்து விட்டது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.