May 18, 2018
தண்டோரா குழு
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.இந்த பருவத்திற்குள்ளேயே ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும்,நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கே உள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும்,காவிரி ஆணைய தலைமையகம் டெல்லியில் அமையும் என்றும் மத்திய அரசு ஆணையத்துக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.