March 29, 2018
தண்டோரா குழு
காவிரி டெல்டா அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே கேடு என நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில்,காவிரி விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா.அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல,இந்தியாவிற்கே கேடு.காவிரி டெல்டாவை வறட்சியிலிருந்து காப்பாற்ற மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தீர்வு எனக் கூறியுள்ளார்.