March 31, 2018
தண்டோரா குழு
காவிரி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 3 மாதகால அவகாசம் தேவை என மத்திய அரசு அனுமதி கோரியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடாத மத்திய அரசு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் – கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.