• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்

February 16, 2018 தண்டோரா குழு

காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த தீர்ப்பில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி.க்கு பதிலாக 177.25 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில்,

காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.அதே நேரத்தில் காவிரியை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இனி கிடைக்கும் தண்ணீரை பாசனத்திற்காக எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.வாக்கு வேட்டையில் காவிரி சர்ச்சையை தூண்டிவிட்டு தேசியம் மறந்து பேசுகிறார்கள்.வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என்ற நோக்கில் சச்சரவை ஏற்படுத்திவிடக்கூடாது உச்சநீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக உள்ளது சற்றே ஆறுதலாக இருக்கிறது.

மேலும்,காவிரி வழக்கின் தீர்ப்பு போராடுவது உதவாது,இதற்கு தீர்வு காண்பதற்காக முயற்சிப்பதே சிறந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க