February 16, 2018
தண்டோரா குழு
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும்.
மேலும்,காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன என்றும் இறுதி தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.