December 14, 2017
தண்டோரா குழு
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் போது மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடலுக்கு முதல்வர் பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் தனி விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர், உள்துறை செயலர், சென்னை காவல் ஆணையர் மற்றும் உயரதிகாரிகளும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.