March 16, 2018
தண்டோரா குழு
திருச்சியில் இளம்பெண் உஷா உயிரிழந்த விவகாரத்தில் கைதான காவல் ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் கோரிய மனுவை திருச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்சி திருவெறும்பூரில் இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் உதைத்ததில், அதில் பயணம் செய்த உஷா என்ற பெண் உயிரிழந்தார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாமின் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் காமராஜ் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.