• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறை மற்றும் பி.எஸ். ஜி மருத்துவமனை இணைந்து போலீசாருக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி

November 9, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல்துறை மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று துவங்கி வைத்தார். இந்நிலையில், முதலுதவி என்பது நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த நபருக்கு, மருத்துவ உதவி அல்லது ஆம்புலன்ஸ் வரும் வரை ஒரு நபரின் உயிரைக் காப்பாற்ற நோயின் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல், உடனடி மருத்துவ உதவி என்றும், நிலைமை மோசமடைவதைத் தடுக்கவும், காயமடைந்த நபர் விரைவாக குணமடைய உதவும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும்,இப்பபயிற்சியின் முக்கிய நோக்கமானது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்பதற்காக பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்கள், ரோந்து காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் காவலர்கள் உடனே விபத்து ஏற்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

இந்நிலையில் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரும் வரை காத்திருக்காமல், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும், முதுகு தண்டுவடத்தில் காயம் அடைந்தவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றுவது குறித்தும், மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு
சி.பி.ஆர் சிகிச்சை அளிப்பது குறித்தும் அனைத்து காவலர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாகும். .

இந்நிலையில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் இப்பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க