May 23, 2018
தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இச்சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த்,
ஸ்டெர்லைட் போராட்டின் போது காவல்துறையின் வரம்பு மீறிய, மிருகத்தனமான செயலை கண்டிப்பதாக கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக அரசு மற்றும் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுவதாக சாடியுள்ளார்.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.