• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது – டிஜிபி சுற்றறிக்கை

July 23, 2019 தண்டோரா குழு

காவல் துறையினர் வரதட்சனை, பரிசுப்பொருட்கள் வாங்கக்கூடாது என அனைத்துக் காவல்துறைனருக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அண்மை உத்தரவை செயல்படுத்தும் விதமாக டிஜிபி ஜே.கே.திரிபாதி, அனைத்துக் காவல்துறைனருக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

காவல்துறையில் பணிபுரிபவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்த பரிசுப்பொருட்களையும் பெறக் கூடாது. பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், டிஜிபியின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெறக்கூடிய பரிசுப்பொருளின் விலையானது 200 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சனை பெறக் கூடாது, தொழில் பங்குதாரராக இருக்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளையும் டிஜிபி பிறப்பித்துள்ளார்.இதை மீறுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க