• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையினர் நவீனத்துமான ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாம்

November 9, 2022 தண்டோரா குழு

போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் புலனாய்வு துறை ஆய்வு போன்ற வசதிகளில் காவல்துறையினர் நவீனத்துமான ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது.

தற்போது பல்வேறு துறைகளில் ட்ரோன் கேமரா எனப்படும் ஆளில்லா சிறிய வகை விமானங்கள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இது போன்ற ட்ரோன் கேமராக்களின் பயன்பாடு காவல்துறை வட்டாரங்களிலும் தற்போது பயன்படுத்தபடுகின்றது.

இந்நிலையில் கோவையில் செயல்பட்டு வரும் டி.ஜி.ட்ரோன் கேமரா பயிற்சி மையம் சார்பாக ட்ரோன் கேமராவை கையாள்வது குறித்து காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பயிற்சி முகாமை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இது குறித்து டி.ஜி.ட்ரோன் கேமரா பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் ப்ரவீன் ராஜ சேகர் கூறுகையில்,

ட்ரோன் கேமராவில் உள்ள அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையிலான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும்,இதனால் காவல் துறையினரின் சில இடங்களில் செல்ல முடியாத இடங்களுக்கும் இந்த தொழில் நுட்பம் வாயிலாக செயல்பட முடியும் என தெரிவித்தார்.முன்னதாக நடைபெற்ற பயிற்சி முகாம் துவக்க விழாவில் டி.ஜி.ட்ரோன் கேமரா பயிற்சி மையத்தின் விற்பனை மேலாளர் பிரபு,இயக்குனர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க