June 8, 2018
தண்டோரா குழு
உலக கோப்பை கால்பந்து ஆட்டத்தை பார்க்க ரசிகர் ஒருவர் ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவிற்கு டிராக்டர் மூலம் பயணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 14-ம் தேதி ரஷ்யாவில் துவங்கவுள்ளது.பல்வேறு நாட்டைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்கு வந்து கொண்டிருகின்றனர்.இந்நிலையில் ஜெர்மனி ரசிகரான ஹூபோல்ட் விர்த்தின் பயணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஜெர்மெனியில் இருந்து ஹூபோல்ட் விர்த் அவரது செல்ல பிராணியான அவரது நாயுடன் டிராக்டரில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.இதுமட்டுமின்றி அவரது டிராக்டரில் உலக கோப்பை சின்னங்களை அலங்கரித்துள்ளார்.இந்த டிராக்டர் ஆனது ஒரு மணி நேரத்திற்கு 30 கிலோமீட்டர் என்கின்ற வேகத்தில் செல்கிறது.இதனால்,அவர் வருங்கின்ற 17 ஆம் தேதி ஜெர்மனி அணி பங்கேற்கும் போட்டியை காண்பதற்கு சென்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.