July 3, 2018
தண்டோரா குழு
கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்,கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு,மீன்வள அறிவியல்,உணவு தொழில்நுட்பம்,கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்குத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றது.
இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை வேப்பேரி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசந்திரன் வெளியிட்டார். மேலும்,இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரவித்தனர்.