• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலை உணவுத் திட்டம் : நிபந்தனைகளுடன் ஆள் சேர்ப்பு- ஆட்சியர் தகவல்

May 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை கோவை மாவட்டத்தில் செயல்படுத்தும் பொருட்டு காலை உணவு தயாரிக்க கிராம ஊராட்சி ,பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழு மூலம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் அரசு தெரிவித்துள்ள நிபந்தனை மற்றும் தகுதிகள்அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிபந்தனைகள் பின்வருமாறு:

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற கடன்களை தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் அதே ஊராட்சியில், பேரூராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினரின் குழந்தை அதே துவக்கப் பள்ளியில் படிக்க வேண்டும். அக்குழந்தை அப்பள்ளியில் துவக்கப்படிப்பு முடித்து வேறு பள்ளிக்கு சென்றுவிட்டால் அச்சுய உதவிக் குழு உறுப்பினர் காலை உணவு தயாரிப்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு வேறு தகுதியான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் தேர்வு செய்யப்படுவார். மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். உணவு சமைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் தங்கள் பெயரில் இணைய வசதியிடன் கூடிய ஆண்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். அதனை இயக்கத் தெரித்திருக்க வேண்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகாமானதாகும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க