• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலி மனை வாங்குவது தொடர்பாக அடிசியா டெவலப்பர்சின் கோவை அலெர்ட் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

November 16, 2025 தண்டோரா குழு

காலி மனை வாங்குபவர்களுக்கு அரசு வழிகாட்டுதல் முறைகளுடன் நிலங்களை வாங்குவது தொடர்பாக இலவச தகவல்களை வழங்க உள்ளதாக அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் கூறியுள்ளார்.

கோவையில் பாதுகாப்பான நிலங்களை வாங்கும் நடைமுறைகளை ஊக்குவிக்க, அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் அலெர்ட் கோவை” எனும் பிரச்சாரத்தை துவங்கி உள்ளது. முன்னதாக அலெர்ட் கோவை பிரச்சாரத்தை கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர்,கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், கோவை மேயர் ரங்கநாயகி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் பேசினார்..

அப்போது பேசிய அவர்,

ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து பொது மக்கள் பயன் பெறும் விதமாக பல புதிய திட்டங்களை அறிமுக படுத்தி வருவதாக கூறிய அவர்,அந்த வரிசையில் அலெர்ட் கோவை எனும் பிரச்சாரத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்தார்.

காலி மனை அல்லது நிலம் வாங்குபவர்கள் அரசு வழிகாட்டுதல் முறைகளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அலெர்ட் கோவை வழியாக ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கு இலவசமாக தகவல்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.இந்த முயற்சி கோவையில் முதன் முறையாக துவக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர், விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சேவையை கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, நிலம் வாங்குவதில் ரேரா வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி உள்ளதாக கூறினார்.இன்னும் சில தினங்களில் அடிசியா இதற்கென தனி குழு அமைத்து காலி மனை வாங்குபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எந்தவொரு சொத்திலும் முதலீடு செய்வதற்கு முன் வீடு வாங்குபவர்கள் ரேரா பதிவைச் சரிபார்க்க வலியுறுத்துவதும், தவறான கூற்றுக்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும், கோவையில் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதே அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது மனித வள மேம்பாடு துணை தலைவர் கிங்ஸ்டன்,இயக்குனர் செந்தில் குமார்,சி.ஆர்.ஓ.சிவக்குமார், விற்பனை பிரிவு துணை தலைவர் ஸ்ரீனிவாசன், ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க