November 16, 2020
தண்டோரா குழு
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்சார வாரிய சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளாதாக அறிவித்துள்ளனர்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய இஞ்னியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
மின்சாரவாரியத்தில் பணியாளர் பற்றக்குறை உள்ளது. கோவை மண்டலத்தில் 5439 பதவிகள் உள்ள நிலையில் 482 பேர் தான் பணியாற்றி வருகின்றனர்.இதனால் அவசர அழைப்புகளை நிவர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். கீழ் மட்ட பணியாளர்கள் குறைவாக உள்ளனர். அவசர அவசரமாக பணிகளை செய்ய உத்தரவிடுவதால் உயிர் பலி ஏற்படுகிறது.பிரிவு பணியாளர்கள் மன உளைச்சளுடன் தான் பணியாற்றுகின்றனர்.
இதுகுறித்து வாரியதலைவருக்கு 2 ஆண்டுகளாக கடிதம் எழுதியுள்ளோம். மின் பொறியாளரிடமும் முறையிட்டுள்ளோம். ஆனாலும் பிரச்சனையை தீர்க்கவில்லை.எனவே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும்.மின்துறை அமைச்சரிடம் கடந்த 8 வது மாதம் முறையிட்டோம். அவர் வாரியத்தலைவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். ஆனால் வாரியத்தலைவர் இதுவரை பேச்சுவார்த்தை இல்லை.இந்த சூழலில், கோவை, திருப்பூர் உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.