February 28, 2020
காலவதியான கலைக்கொல்லியால் காய் வாழை விவசாயம் பாதிப்பு , நிவாரணம் கொடுக்காமல் ஏமாற்றும் உ பி எல் நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை வாங்கித்தரக்கோரி விவசாயி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியைச்சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு கலிக்க நாயக்கன் பாளையத்திற்கு உட்பட்ட தீனம்பாளையத்தில் நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் காய் வாழையை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் ஒரு ஏக்கரிலுள்ள 1200 வாழைகளுக்கிடையே உள்ள கழையை கட்டுப்படுத்த, உ பி எல் விவசாய மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இருந்து ஸ்வீப் பவர் மற்றும் சாதி என்ற மருத்தை வாங்கியுள்ளார். இந்த மருந்தை விற்பனை மேலாளர் மற்றும் விற்பனை பிரதநிதி முன்னிலையில் , கழைகளை கட்டுப்படுத்த வாழைகளுக்கிடையே தெளித்துள்ளார். அப்போது வாழைகளின் வளர்ச்சி தடைபட்டுப்போனது. இதனையடுத்து உ பி எல் நிறுவனத்தின் ஏரியா மேலாளர் கோபி மற்றும் விற்பனை பிரதநிதி பிரித்விராஜ் காய் வாழைகளை பார்வையிட்டு மேலும் பல மருந்துகளை கொடுத்து அவர்களது கண்முன்னே தெளிக்க விவசாயி செந்தில்குமாரிடம் சொல்லியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவரும் தெளித்த போது, வாழை வளர்ச்சி அடையவில்லை என தெரிகிறது. இதுகுறித்து உ பி எல் நிறுவனத்தினர், தாங்கள் காலவதியான கழைக்கொல்லி மருந்தை கொடுத்து ,1000 வாழை மரங்கள் வளராமல் போனதை ஒப்புக்கொண்டு , விவசாயிடம் 4 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் மூன்று மாத காலமாகியும் மேலாளர் உள்ளிட்ட விற்பனை பிரதநிதி இழப்பீட்டை வழங்காமல் , ஏமாற்றி வருவதாக கூறி மாவட்ட ஆசியரிடம் விவசாயி புகாரளித்தார்.
இதனைத்தொடர்ந்து தோட்டக்கலைத்துறை உதபி இயக்குனரை விசாரணை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.