November 3, 2020
தண்டோரா குழு
இந்தியாவில் பல ஆண்டுகளாக மக்களுக்கு சீலிங் ஃபேன்கள் சொகுசை அளித்துவருகின்றன. ஏ.ஸி போன்ற சாதனங்கள் வந்தபின்னரும் சீலிங் ஃபேன்களின் விற்பனை கொஞ்சமும் குறையவில்லை. சொல்லப்போனால் வருடா வருடம் அது 10 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவில் 50 கோடி சீலிங் ஃபேன்கள் உள்ளன.ஒவ்வொரு வருடமும் 5 கோடி சீலிங் ஃபேன்கள் சந்தைக்கு வருகின்றன. என்றாலும் இதன் தொழில்நுட்பம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது.இந்த சீலிங்ஃபேன்கள் தோராயமாக ஒரு யூனிட்டுக்கு 13 மணி நேரம் ஓடுகின்றன. ஒரு சீலிங் ஃபேன் நடுத்தர வேகத்தில் 7 மணி நேரம் ஓடுகிறதென்று வைத்துக்கொண்டால், இந்தியாவிலுள்ள அனைத்து சீலிங் ஃபேன்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 136 மெகா யூனிட்டுகளை பயன்படுத்துகின்றன.சென்னைப் பெருநகரின் ஒரு நாளைய மின் தேவை 72 மெகா யூனிட்டுகள் என்பதை இதனுடன் ஒப்பிட்டால் சீலிங் பேன்கள் நமது மின்சாரத் தேவையில் ஏற்படுத்தும் பாதிப்பைக் கணக்கிடலாம். அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் ஒரு யூனிட் மின்சார பயன்பாடு என்பது சுற்றுச் சூழலில் 1.2 கிலோகிராம் கார்பன்டை ஆக்ஸைடை வெளிவிடுவதாகும். இதிலிருந்து ஒவ்வொரு நாளும் சீலிங் ஃபேன்கள் 1,60,000 டன் கார்பன்டை ஆக்ஸைடை வெளியிட்டு சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இதற்கு என்னதான் தீர்வு?
இப்போது BLDC மோட்டார் தொழில்நுட்பத்துடன் கூடிய, ஆற்றல் திறன் வாய்ந்த புதிய வகை சீலிங் ஃபேன்கள் கிடைக்கின்றன. இவைகள் ஓடுவதற்குத் தேவைப்படும் மின்சாரத்தில் 56% -சதவிகிதத்தைக் குறைக்கின்றன. ஆனால் அதே அளவு காற்றை அளிக்கின்றன. 2012-ல் கோவையின் வெர்ஸா ட்ரைவ்ஸ் நிறுவனம் இந்த டெக்னாலஜியை சூப்பர்ஃபேன் என்ற பெயரில் சீலிங் ஃபேன் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலுள்ள அனைத்து சாதாரண ஃபேன்களையும் சூப்பர்ஃபேன் போன்ற சூப்பர் ஆற்றல் திறன் வாய்ந்த ஃபேன்களாக மாற்றிவிட்டால் அனுதினமும் 87MU மின்சாரத்தை சேமிக்கலாம். 1,00,000 டன் கார்பன்டை ஆக்ஸைடு வெளியாவதையும் தடுக்கலாம்.
சூப்பர்ஃபேன் முழுக்க முழுக்க கோவையிலேயே 2012-ல் கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்படுவது. இதன் வெற்றியைக் கண்ணுற்றபிறகு பிற சீலிங்ஃபேன் நிறுவனங்களும் இதே மாதிரி சூப்பர் ஆற்றல் திறன் வாய்ந்த சீலிங் ஃபேன்களை இப்போது தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த வகையில் சூப்பர்ஃபேன் மட்டுமே முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் ஒரே ஃபேன்.
இந்த ஃபேன்கள் சாதாரண ஃபேன்களை விட எல்லா வகையிலும் சிறந்தவை. ரிமோட் கண்ட்ரோலில் இயங்குவது, சீரான வேகத்தில் ஓடுவது, மோட்டார் சூடாகாமல் இருப்பது, இன்வெர்ட்டரில் அதிக நேரம் உழைப்பது போன்ற பல சிறப்பம்சங்கள் பொருந்தியவை.
அடுத்தமுறை நீங்கள் சீலிங்ஃபேன் வாங்க நினைத்தால் சூப்பர்ஃபேன் போன்ற சூப்பர் ஆற்றல் திறன் வாய்ந்த ஃபேன்களையே தேர்ந்தெடுங்கள். பசுமையான இந்தியாவை உருவாக்குவதில் பங்கெடுங்கள்.