January 13, 2018
தண்டோரா குழு
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனை காலை 7.30 மணி முதல் நடைபெற்று வருகிறது.ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் இருவரும் இந்த இல்லத்தில் தான் வசித்து வருகின்றனர்.கார்த்தி சிதம்பரத்தின் டில்லியில் உள்ள வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், கார்த்திக் சிதம்பரத்தின் மீது பண மோசடி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.