March 6, 2018
தண்டோரா குழு
ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார்கைது செய்தனர். பின்னர் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இன்று கார்த்திக் சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.