• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்

November 17, 2022 தண்டோரா குழு

கோவை கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர் இதனால் கோயில்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம் இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்குவர் சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குருசாமி துணையுடன் மாலை அணிந்து 41 நாட்கள் கடும் விரதம் இருப்பது வழக்கம் இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான இன்று காலை கோவை மாவட்டத்தில் உள்ள பல முக்கிய கோயில்களில் குருசாமி துணையுடன் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர் இதனால் கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாலை அணியும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் சன்னதியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர் மாலையிட்ட பக்தர்கள் தினமும் காலை குளித்து கோவில்களுக்கு சென்று சரண கோஷம் எழுப்புவர் இதனை எடுத்து பல்வேறு பகுதிகளில் சரண கோஷம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க