• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்திற்கு ” இந்திய சிறப்பு ஆராய்ச்சி மேற்கோள் விருது

September 29, 2023 தண்டோரா குழு

வெப் ஆப் சயின்ஸ் ( Web of Science – கிளாரிவேட் ( Clarivate ) நிறுவனத்தால் இந்திய சிறப்பு ஆராய்ச்சிக்கான விருது ” வழங்கும் புதுதில்லியில் நடைபெற்றது. கிளாரிவேட் ( Clarivate ) நிறுவனத்தைச் சார்ந்த துணைத் தலைவர் ஓஷர் ஜிலன்ஸ்கை அனைவரையும் வரவேற்றார்.

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி வாரியத் தலைவர் பேரா.டி.ஜி. சீதாராம்,கிளாரிவேட் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூட்டமைப்பின் துணைத் தலைவர் டயான் தாமஸ் ஆகியோர் இவ்விழாவில் கெளரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.மத்திய உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இயக்குநர் பேரா.அட்டுல் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிறுவனத்தின் முதன்மை வணிகத் தீர்வு ஆலோசகரான முனைவர் சுபாஸ்ரீ நாக் ஆராய்ச்சி கட்டுரைகளின் சிறப்புகளையும் , தரவுகளை உருவாக்கி கணக்கிடுவது குறித்தும் சிறப்புரையாற்றினார். இந்நிறுவனம் விவசாய அறிவியல் , பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் , மருத்துவம் மற்றும் நல அறிவியல் , இயற்கை அறிவியல்,சமூக அறிவியல் , கலை மற்றும் மனிதநேயம்,இடைநிலை அறிவியல் போன்ற தலைப்புகளில் பல்கலைக்கழகங்களுக்கு விருதுகளை வழங்கியது.

இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்திற்கு ” இந்திய சிறப்பு ஆராய்ச்சி மேற்கோள் விருது – 2023 ” வழங்கப்பட்டது.ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கான கட்டுரைகளை அதிக அளவில் வெப் ஆப் சயின்ஸ் – இல் ( Web of Science ) மேற்கோள்களாக ( Citations ) காட்டப்பட்டுள்ளதால் இவ்விருது அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

புதுடில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.க .ரவி இவ்விருதினை நேரில் பெற்றுக் கொண்டார்.

விருதினை பெற்றுக்கொண்டு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.க.ரவி அவர்கள் பேசியதாவது,.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 4 துறைகள் உள்ளன.இந்த துறைகளில் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான சிறந்த கட்டமைப்பு , அறிவியல் கூடங்கள், மற்றும் ஆராய்ச்சி உபகரணங்கள் போன்ற வசதிகள் இப்பல்கலைக்கழகத்தில் சிறப்பாக அமைய பெற்றுள்ளது.இதற்காகவே University Science Instrumentation Centre ( USIC ) என்ற ஆராய்ச்சி கூடத்தை உருவாக்கி இதில் உயர்தர ஆராய்ச்சி உபகரணங்களான Powder X – ray Diffractometer , FE – SEM with EDAX , MALDI TOF – TOF Spectrometer , Confocal Microscope – LSM 710 , AKTA – Protein Purifier , High Resolution Transmission Electron Microscope , X – ray Photoelectron Spectroscopy , Solar Cell Simulator , NMR Spectrometer , etc. , போன்றவைகளைப் பயன்படுத்தி உலகத் தரத்திற்கு இணையாக ஆராய்ச்சிகளை பேராசிரியர்களும் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை உயர்தர ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடுகிறார்கள்.

முக்கியமாக கொரானா காலங்களில் கொரானா எனும் கொடிய வைரஸை இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தி எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த நிறைய ஆராய்ச்சி கட்டுரைகளை அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளியிட்டனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் முதல்நிலை கட்டத்தில் அதனை நிருபிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது . இது போலவே மெல்லிய படலம் ( Thin Film ) , தொடு உணர்வு ( Sensor ) , சூரிய மின்சக்தி ( Solar Power ) . பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ( Green Hydrogen Products ) , மேம்படுத்தப்பட்ட பொருள் அறிவியல் ( Advanced Material Science ) , தாவர மற்றும் கடல் சார்ந்த ( Plant & Marine Compounds ) மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து சிறப்பான முறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆராய்ச்சி வெளியீடுகளை வெளியிடுகிறார்கள்.

எங்களது பல்கலைக்கழகம் தேசிய தர நிர்ணய குழுவால் வழங்கப்பட்ட ஏ பிளஸ் அங்கீகாரம் , தேசிய தரவரிசையில் 30 – வது இடமும் , உலக அளவிலான க்யூ..எஸ் ( QS ) தரவரிசையில் ஆசிய அளவில் 251-260 – வது இடமும் , டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 401-500 – வது பிரிவிலும் , டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் 111 – வது இடத்தையும் , இளம் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் 101-150 – வது இடமும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எங்களது பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல்வேறு அரசு நிதி நிறுவனங்களின் மூலமாக ஆராய்ச்சிகள் குறித்த திட்ட அறிக்கையினை சமர்ப்பித்து நிதிகளைப் பெற்று அழகப்பா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட முக்கிய பங்காற்றுகிறார்கள் . நமது அரசாங்கம் ரூசா திட்டத்தின் மூலம் இதுவரை 120 கோடி ரூபாய் வழங்கியுள்ளது . அழகப்பா பல்கலைக்கழக கண்டுபிடிப்புக்களை உலக ஆராய்ச்சியாளர்கள் , மேற்கோளாக ( Citations ) பயன்படுத்தியுள்ளார்கள் . இதுவரை ஏறத்தாழ 10,758 ஆராய்ச்சி வெளியிடுகளும் மற்றும் h குறியீடு 110 – ம் அழகப்பா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது என தெரிவித்தார்.

ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி தங்களது கண்டுபிடிப்பில் 1,07,570 முறை தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே இவ்விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விருது அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்து அயராது உழைத்த அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிய நிர்வாக பணியாளர்கள் அனைவரையும் துணைவேந்தர் பாராட்டி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

மேலும் படிக்க