July 12, 2025
தண்டோரா குழு
கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின்
(நிகர்நிலை பல்கலைக்கழகம்) 31 வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் கலையரங்கில் நடைபெற்றது.
விழாவில் துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் வரவேற்றார்.மிசோராம் மாநிலத்தின் முதலமைச்சர்
லால்து கோமா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில்,
இளம் பட்டதாரி நண்பர்களே இந்நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நாளாகும்.இச்சிறந்த கல்வி நிறுவனத்தின் மூலம் உங்களின் கடின உழைப்பினாலும்,அர்ப்பணிப்பினாலும் வெற்றிகரமாக படித்து பட்டம் பெறுகிறீர்கள். குறிக்கோள் இல்லாத வாழ்வு அர்த்தமற்றது. உங்கள் குறிக்கோளை கண்டுபடியுங்கள் அது உங்கள் லட்சியங்களை வடிவமைக்கும்.
உலகிற்கு பொறியாளர்கள்,மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மேலாளர்கள் தேவை,ஆனால் அதை விட கருணை, இரக்கம் மற்றும் ஒருமனப்பாடு கொண்டவர்கள் முக்கியமாக தேவை. இந்தியா மிகப்பெரிய ஆற்றல் மற்றம் சிக்கலான சவால்களைக் கொண்ட நாடு, நீங்கள் கற்ற கல்வி உங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல தேசத்தின் சிக்கல்களை மாற்றுவதற்கான கருவியாக இருக்கட்டும், தேசத்தை கட்டுபவர்களாக, அமைதியை நிலைநாட்டுபவர்களாக மாறுங்கள் என்றார்.
துணைவேந்தர் ஆண்டறிக்கையை வாசித்தார்.காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி தங்களின் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
அப்போது பேசிய அவர்,
காருண்யாவில் படித்து வெற்றிகரமான பட்டங்களை பெற்ற உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். இம்மகிழ்ச்சியான தருணத்தில் நீங்கள் காருண்யாவில் சிறந்த கல்வியோடு நீங்கள் பெற்றுக்கொண்ட நற்குணங்களை தொடர்ந்து உங்கள் வாழ்வில் கடைபிடித்து , வாழ்ந்து காட்டி சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு உங்கள் தொழில் நுட்ப அறிவின் மூலம் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும் .
நீங்கள் கற்ற கல்வியும் , சிறந்த வாழ்க்கை நெறி முறைகளும் நீங்கள் வெற்றியடைய வழிகாட்டும் . நீங்கள் நேர்மையுடன் தன்னலமன்றி வாழ்ந்து , நமது பாரத தேசத்தை உலகளாவிய அளவில் எல்லா துறைகளிலும் சிறந்த தேசமாக மாற்ற வேண்டும் என்று வாழ்த்தி , இறைவனின் ஆசியோடு எல்லா நலமும் , வளமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்தார் . பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களின் சமூக பொறுப்பின் வெளிப்பாடாக பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக நிதி வழங்கினர் .
வேந்தர் விருதுகள் டாரா அன் லுக்கோஸ் ( B.Tech. Computer Science and Engineering),பியூலா ( B.Tech. Electronics and Communication Engineering) கெத்சியா ( M.Tech . Computer Science and Engineering ) பார்டிகா மைத்ரா B.A. Criminology ) , ரெனி ( B.Sc ( Hons .) Agriculture ) வழங்கப்பட்டது.
முன்னதாக,மிசோராம் மாநிலத்தின் முதல்வர் லால்துகோமாவின் தலைமைத்துவத்தையும் சேவைகளையும் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இவ்விழாவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.