• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரள இளைஞர் கைது

November 20, 2019

வாளையார் அருகே காரில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக- கேரள எல்லையான வாளையாரில் கேரள கலால் வரித்துறை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி கார் ஒன்று வந்தது. ஆனால் கார் சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றது. பின்னர் அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்றனர். இந்நிலையில் டோல்கேட்டில் இருந்த மற்றொரு கலால் வரித்துறை அதிகாரிகள் காரை மடக்கி பிடித்தனர். பிடிக்கப்பட்ட காரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது காரின் பின்புறத்தில் தனி அறை அமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 10 கிலோ கஞ்சா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அந்நபரிடம் விசாரனை நடத்தியபோது கேரள மாநிலம், மலப்புரம் மஞ்சேரி பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல் (28) என்று தெரியவந்தது, அலங்கார பொருட்கள் வியாபாரம் செய்வதன் பேரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்ததுள்ளது. மேலும் கேரளாவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிட தக்கது.

மேலும் படிக்க