• Download mobile app
11 Jan 2026, SundayEdition - 3623
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடை கராத்தே டீம் மத்திய அரசு போட்டியில் அசத்தல்

January 11, 2026 தண்டோரா குழு

மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், உடற்கல்வி துறை சார்பில் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், காரமடையை சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டு 40 தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

மத்திய இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உடற்கல்வி துறை சார்பில் டெல்லியில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.இந்த கராத்தே போட்டிகளில் 28 மாநிலங்களை சேர்ந்த தேசிய அளவில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வயதுக்கு ஏற்றாற்போல் போல் பல்வேறு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 26 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 40 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு, காரமடையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் கராத்த பயிற்சியாளர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

மேலும் படிக்க