• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடை அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

January 13, 2022 தண்டோரா குழு

காரமடை அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு.அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கனின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்து பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஆனால்,தற்போது கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேலும்,இரு டோஸ் தடுப்பூசி சான்று,முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி சொர்க்கவாசல் திறப்பிற்கு பின்னர் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு பகல்பத்து உற்சவத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து அரங்கநாதனுக்கு தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அரங்கநாத பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்து வந்தார்.

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதற்காக அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு அரங்கநாதருக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ஷேச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராய் அரங்கநாதர் பரமபத வாசல் முன்பு எழுந்தருளிய நிலையில் அதிகாலை சரியாக 5.45 மணியளவில்
சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்ராமானுஜர், ஆழ்வார்களுக்கு முதலில் அரங்கநாதர் காட்சி அளித்தார்.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து முன்மண்டபம் வந்தடைந்தார்.பின்னர், கோவில் காலை 6 மணி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.இதற்காக அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் காரை அரங்கனை தரிசித்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

மேலும் படிக்க