• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடை அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் 10,000 வாழை மரங்கள் சேதம்!

May 17, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் பத்தாயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவர் ஒன்றரை ஏக்கரில் சுமார் 1500 வாழைகள் பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பெய்த மழையில் வாழைகள் சேதமடைந்தன.

மேலும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் இரண்டரை ஏக்கரில் பயிரிட்டு இருந்த கதலி 2500 வாழை மரங்களும்,
சுப்பையன் என்பவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் பயிரிட்டு இருந்த 1,200 வாழைகளும் சேதம் ஆகியுள்ளது.அதேபோல் புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவர் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த
வாழை மரங்களும் சேதமானது.

நேற்று பெய்த கனமழையால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டு இருந்த வாழைகள் ஒரேநாளில் சேதமானது.இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.

மேலும் படிக்க