• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

January 10, 2022 தண்டோரா குழு

கொரோனா பரிசோதனைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலே அவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அறிகுறி உடையவர்கள் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம்.தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 60வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அறிகுறி இல்லாத நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ளத் தேவை இல்லை.தொற்று உறுதியாகி கோவிட் சிகிச்சை மையங்கள் அல்லது வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலே 7வது நாள் முடிந்து தொற்று பரிசோதனை மேற்கொள்ளாமல் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் முழுமையாக குணமடைந்த பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க