April 11, 2018
தண்டோரா குழு
காமன்வெல்த் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2018ல் மகளிருக்கான டபுள் டிராப் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் ஷ்ரேயாசி சிங் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.
துப்பாக்கிச் சுடுதலில் ஷ்ரேயாசி சிங் தங்கம் வென்றதன் மூலம், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 23ஆனது.இதன் மூலம் 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் உட்பட 24 பதக்கங்களுடன், காமன்வெல்த் 2018 பதக்க பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.