• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கான்பூர் ரயில் தடம்புரண்ட வழக்கில் தேடப்பட்டவர் கைது

February 7, 2017 தண்டோரா குழு

கான்பூர் ரயில் தடம்புரண்ட வழக்கில் தேடப்பட்ட ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

2௦16ம் ஆண்டு நவம்பர் 2௦ம் தேதி இந்தூர்-பாட்னா விரைவு ரயில் கான்பூர் நகரத்தின் அருகில் உள்ள புக்ராயன் என்னும் இடத்தில் தடம் புரண்டது. அதில் 15௦ உயிரிழந்தனர் 15௦ படுகாயம் அடைந்தனர். அந்த விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் கவிழ்ந்தன. விபத்துக்கு நாசவேலைதான் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இச்சம்பவத்திற்குக் காரணமான முக்கிய குற்றவாளி ஷம்சுல் ஹோடா துபாயில் தலைமறைவாக இருந்தார். அவர் உள்ளிட்ட மூன்று பேர் நேபாளம் வருவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து காவல் துறையினர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஹோடா மற்றும் மூன்று பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து நேபாள காவல் துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பசுபதி உபத்யாயா கூறியதாவது:

“திரிபுவன் விமான நிலையத்தில் ஹோடாவைkd கைது செய்தோம். 2௦16ம் ஆண்டு நவம்பர் 2௦ம் தேதி கான்பூரில் நடந்த ரயில் விபத்தில் 15௦ பேர் உயிரிழந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்தியாவில் ஹோடா சம்பத்தப்பட்ட எல்லா குற்றவியல் வழக்கில் நேபாள காவல்துறை இந்தியாவுக்கு உதவி புரியும்.

மற்றவர்கள் பிரிஜ் கிஷோர் கிரி, ஆஷிஷ் சிங் மற்றும் உமேஷ் குமார் குர்மி என்றும் அவர்கள் மூவரும் தெற்கு நேபாளத்தின் கலையா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது. ஹோடாவுடன் தொடர்பு கொண்ட நேபாளத்தைச் சேர்ந்தவர் அவர்களுக்கு மூன்ற லட்சம் பணம் தந்துள்ளார். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

நேபாளத்தில் உள்ள பாரா மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலையில் முக்கியமான காரணம் ஹோடா. பாரா மாவட்டத்தில் ஹோடா மீது வழக்கு பதிவாகியுள்ளது” என்றார்.

மேலும் படிக்க